fbpx

திடீரென பரவும் காய்ச்சல்..!! அனைத்து கறிக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

நெல்லூரில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளன. சதகுட்லா மற்றும் கும்மல்லடிப்பா பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் சில நாட்கள் இடைவெளியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டன. அவர்கள், மாதிரிகளை எடுத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது தான் அப்பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோழிகள் இறந்த பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோழிக்கடைகளை அனைத்தையும் அடுத்த 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோழிக் கடைகளை 3 மாதங்களுக்கும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கால்நடை அதிகாரிகள், கோழி இறைச்சியில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, போபாலில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் நெல்லூர் மாவட்டத்தில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அங்குப் பறவை காய்ச்சல் காரணமாக சுமார் 10,000 கோழிகள் உயிரிழந்துள்ளது. இப்போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சதகுட்லா மற்றும் கும்மாலடிப்பா கிராமங்கள் 44 கிமீ தொலைவில் அமைந்துள்ளன. எனவே, இந்த இரு கிராமங்களுக்கு நடுவில் இருக்கும் கிராமங்களிலும் கூட பறவை காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, அங்கு உள்ள கோழிகளையும் சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கோழிகளை எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடுகளை விதித்து நெல்லூர் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chella

Next Post

திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் கோடி..? ஹெச்.ராஜா சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Sat Feb 17 , 2024
திமுக அமைச்சர்களின் சொத்தை கையகப்படுத்தி விற்றாலே தமிழ்நாட்டின் கடனை அடைத்துவிடலாம் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாஜகவின் தேசிய குழு கூட்டம் இன்று துவங்கியது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் 2 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்க வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”3-வது முறையாக பாஜக தான் ஆட்சி அமையும் என்ற நிலையில், பாஜகவின் தேசிய […]

You May Like