fbpx

திடீர் திருப்பம்..!! ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. ஆனால், மழை காரணமாக ஆளுநர் மாளிகையே தேநீர் விருந்தை தள்ளிவைத்தது.

அதேபோல் கடந்த குடியரசு தின விருந்தையும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தன. இந்நிலையில், இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று மாலை தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்தன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம். ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்“ என்று தெரிவித்தார். அதாவது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார்கள். அதேநேரத்தில் அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.

Read More : தியாகிகளுக்கான ஓய்வூதியம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..? அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

English Summary

On behalf of the Tamil Nadu government, we are participating in the tea party hosted by Governor RN Ravi today.

Chella

Next Post

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் கனவு..!! - பிரதமர் மோடி

Thu Aug 15 , 2024
India's dream to host Olympics in 2036: PM Modi during Independence Day speech

You May Like