லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லை என்றும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திப்போம் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து கூறி வந்தாலும், சின்னம் கிடைக்காத நிலை இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு குறைவு. தாமரையில் போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியதாக தெரிகிறது. ஆனால், தாமரையில் போட்டியிட்டால் ஓ.பன்னீர்செல்வம் பாஜக பக்கம் சென்றுவிட்டதாக மாறும். அதிமுகவிற்கு உரிமை கோருவதில் அர்த்தம் இல்லாமல் போகும்.
இதனால் லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ்-க்கு 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க இன்று பாஜக சார்பாக கையெழுத்து போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 6 இடங்களை ஓபிஎஸ் கேட்ட நிலையில், 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓபிஎஸ் பக்கம் பாஜக திரும்ப தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சின்னம் பிரச்சனை காரணமாக லோக்சபா தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியில்லை என்று தகவல்கள் வருகின்றன. பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் மோடி – ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர். இன்று இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : Lok Sabha | இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி..? நடத்தை விதிகள் உடனே அமல்..!!