fbpx

திடீரென ஆற்றுக்குள் பாய்ந்த ஜீப்..!! 4 பேர் பரிதாப பலி..!! தேடுதல் வேட்டையில் மீட்புக் குழு..!! நடந்தது என்ன..?

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் புல்கான் பைபாஸில் உள்ள சிவநாத் ஆற்றின் பழைய பாலத்தில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்த ஜீப், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, எடிஆர்எஃப் குழுவினர் இன்று காலை ஆற்றில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். டிராக்டரைப் பயன்படுத்தி ஆற்றுக்குள் இருந்து வாகனத்தை இழுக்க முயன்றனர்.

அப்போது கயிறு அறுந்து ஆற்றுக்குள் ஜீப் மீண்டும் விழுந்தது. பல மணிநேர போராட்டத்திற்குப் பின் கிரேன் உதவியுடன் ஜீப் வெளியே மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், ஜீப்பை ஓட்டி வந்தவர் போர்சி பகுதியில் உள்ள சட்ராட் கிராமத்தைச் சேர்ந்த லலித் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடலுடன், 30 வயது பெண் மற்றும் 9 மற்றும் 11 வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 4 உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

பணக்காரர்கள் பட்டியல்..!! முதலிடத்தை பிடித்திருப்பது யார் தெரியுமா..? அட இவரு மீண்டும் வந்துட்டாரா..?

Wed Sep 6 , 2023
பார்ச்சூன் இந்தியா 2023ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முதலிடத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 99.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இரண்டாம் இடத்தில் அதானி குழும நிறுவனங்களின் தலைவரான கவுதம் அதானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 63.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மூன்றாம் இடத்தில் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் மிஸ்திரி குடும்பம் உள்ளது. இவர்களது சொத்து மதிப்பு […]

You May Like