இந்திய தபால் துறையானது, வங்கிகளுக்கு இணையாக பொதுமக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அதில், வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால், தற்போது மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் உள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. இதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டித்தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அந்தவகையில், செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுரக்ஷா யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது பால் ஜீவன் பீமா என்ற திட்டத்தில் அதிக பலன்கள் கிடைக்கின்றன. இத்திட்டத்தில் 5 வயது முதல் 20 வயதிற்குள் இருப்பவர்கள் இணைய முடியும். இந்த திட்டத்தின் கீழ் குழந்தையின் பெற்றோர் 45 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும். இதில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் என முதலீடு செய்ய முடியும். இதில், மெச்சூரிட்டி காலத்தின் போது ரூ.3 லட்சம் வரை காப்பீடு தொகை உங்களுக்கு கிடைக்கும். இந்த பாலிசியை 5 வருடங்களுக்கு வழக்கமான பிரீமியத்தை செலுத்திய பிறகு பெய்டு ஆப் பாலிசியாக மாற்றிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் பெற்றோர்களால் கடன் பெற முடியாது. மெச்சூரிட்டி கால முடிவடையும்போது உங்களின் குழந்தைக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும்.