fbpx

Summer | மக்களே இனி உஷாரா இருங்க..!! கோடை காலம் ஆரம்பம்..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

கடந்த சில மாதங்களாக மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என தட்பவெப்ப நிலை சீராக இருந்த நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summer | சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை இயல்பு விட அதிகமாக இருக்கும் என்றும், இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மட்டும் அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை காலம் தொடங்கிவிடும் என்ற நிலையில், தற்போது பிப்ரவரி இறுதியிலேயே வெப்பநிலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. அடுத்து வரும் 3 மாதங்கள் பொதுமக்கள் கடும் வெயிலை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திரம் பொதுமக்களுக்கு கடும் சவாலாக இருக்கும். கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து குழந்தைகள் மற்றும் முதியவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

English Summary : Summer season has started

Read More : https://1newsnation.com/rama-temple-opening-ceremony-video-without-anesthesia-during-surgery-shock-in-andhra/

Chella

Next Post

Hall Ticket | பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களே..!! இன்று ஹால்டிக்கெட் வெளியீடு..!!

Tue Feb 20 , 2024
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Hall Ticket | 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்புக்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இவர்களுக்கான […]

You May Like