fbpx

கோடைக்காலம்!… நாம் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளும்!… தீர்வுகளும்!

கோடைக் காலத்தில் நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்தி, சரியான ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைக் காலத்தில் அதிகரிக்கும் சூட்டால், தலைவலி குமட்டல், வெப்ப பக்கவாதம், de-hydration, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே தான் கோடைக்காலம் வந்த உடன் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமானதாக உள்ளது.
கோடைக் காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் உடலின் தேவைகள் மாறும். அந்தவகையில் கோடைக்காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியவை மற்றும் தவிர்க்கவேண்டியவைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெளியில் சென்று வந்த உடன், பிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியான நீரை குடிப்பது, ஜூஸ் குடிப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் இப்படி வெயில் சூட்டில் சென்று வந்த உடன் குளிர் நீர், ஜீஸ் குடிப்பது உங்கள் உடலை அதிகளவில் பாதிக்கும். தொண்டை வலி, செரிமான தொல்லைகள் ஏற்படும். எனவே வெளியில் சென்று வந்த உடன் சாதாரண நீரைப் பருகுவதே நல்லது. பிரிட்ஜில் உள்ள நீரைக் குடிப்பதை தவிர்க்கவும்.தலை வலி ஏற்படும் போது காபி குடிப்பதை வழக்கமாகப் பலர் வைத்துள்ளார்கள். காப்பியில் உள்ள காஃபின் தலைவலியைப் போக்கும். ஆனால் காஃபின் உடலில் உள்ள அதிக நேரை உரிஞ்சும். எனவே கோடையில் டீ, காபி குடிப்பது உங்கள் தலைவலியை அதிகரிக்கும்.

மிகவும் குளிரூட்டப்பட்ட, பேக் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அதிக சர்க்கரை இருக்கும். இது உங்களுக்குத் தற்காலிகமாக அதிக ஆற்றலை அளிக்கும். ஆனால் ஒரு சில நாட்களில் ஆற்றலைக் குறைத்துவிடும். எனவே பழ ஜூஸ், நாட்டு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ் போன்றவற்றைக் குடிப்பதே சிறந்தது.பலர் கோடைக்காலத்தில் உணவுக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்று திட்டமிடுவார்கள். ஆனால் மந்தநிலை, தலைவலி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற டையட்களை தவிர்த்து ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது தான் ஆற்றலுடனும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும்.

முட்டை, மீன் மற்றும் சிக்கன் போன்றவற்றைக் கோடைக் காலத்தில் சாப்பிட்டால் உடல் சூட்டை ஏற்படுத்தும் என்று பலரும் தவிர்ப்பார்கள். ஆனால் அது தவறு. இந்த மூன்றிலும் அதிக புரதம் உள்ளது. இவை கோடைக்காலத்திலும் சரியான உடல் எடையுடன் உங்கள் உடல் எடையை வைத்துக்கொள்ள உதவும். ஆனால் ஆட்டுக் கறி, பீப் மற்றும் பன்றிக்கறியை தவிர்க்க வேண்டும்.

Kokila

Next Post

தும்பை இருந்தால் தூரப்போகும் நோய்கள்!... பாம்பு கடிகளுக்கு முதலுதவி!... மருத்துவ குணங்களை அறிந்துகொள்வோம்!

Fri Mar 31 , 2023
பல்வேறு நோய்களுக்கு பிரதான தீர்வாக உள்ள தும்பையில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்துகொள்வோம். தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவலி, சளி, மூக்கில் சதை வளர்ச்சி என அனைத்துப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக தும்பை இருக்கும். பாட்டி வைத்தியத்தில் தும்பை இலையை சாப்பாட்டில் சேர்ப்பது. ஆவி பிடிப்பது, தும்பை பூ போட்ட நல்லெண்ணெய்யை தேய்ப்பது எல்லாம் முக்கிய பழக்கவழங்கங்கள். மழைக்காலம் […]

You May Like