fbpx

Summer தொடங்கியாச்சு..!! உங்க வீட்ல ஏசி இல்லையா..? அப்படினா இந்த செடிகளை வீட்டில் வளர்த்து பாருங்க..!! ஜில்லுனு இருக்கும்..!!

கோடை காலத்தில் குளிர்ந்த காற்று வீசும் இடங்களை மனம் தேடும். ஆனால், எப்போது ஏசியை போட்டுக்கொண்டு உட்கார முடியாது. மின்கட்டணம் எகிறும். மேலும், அனைவர் வீடுகளிலும் ஏசி இருப்பது சாத்தியமில்லை. ஆனால், குறைந்த பட்ஜெட்டில் இயற்கையான குளிர்ந்த காற்றை சுவாசிக்க சிறந்த வழிகள் உள்ளன. நாம் தொட்டிச்செடிகளை வளர்த்தால் இந்த சில்லென்ற காற்றை சுவாசிக்கலாம்.

நகரம் என்றாலும் கிராமம் என்றாலும் தொட்டிச்செடிகள் வளர்ப்பது எளிது. நகரம் என்றால் மாடியில் வளர்க்கலாம். அதிலும் கோடைக்கு ஏற்ற, நல்ல குளிர்ந்த காற்றை கொடுக்கக் கூடிய தொட்டிச்செடிகளை வளர்ப்பது மிகவும் சிறந்த ஒன்று. அப்படி எந்தெந்த தொட்டிச்செடிகள் குளிர்ந்த காற்றை வீசும், அவற்றை எப்படி வளர்க்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரப்பர் இலை செடி (Ficus Elastica)​

ரப்பர் செடி அதிக பசுமையாக இருக்கும். இதன் இலைகள் பெரிதாக இருக்கும். இது அதிக ஈரப்பதத்தை மீண்டும் காற்றில் வெளியிடும். இது சுற்றுச்சூழலில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு உறிஞ்சுவது மட்டும் அல்லாமல் ஆரோக்கியமும் அளிக்கிறது. ஈரப்பதமான சூழலில் செழித்து வளரும் இந்த செடிகள் அதன் வேர்கள் வழியாக தண்ணீரை எடுத்து, இலைகள் அல்லது இலைகளின் அடிப்பகுதியில் உள்ள துளைகள் வழியாக ஈரப்பதத்தை வெளியிடும். பேபி ரப்பர் செடி இலைகள் என்பது சுற்றுச்சூழலின் ஆக்ஸிஜன் மற்றும் வெப்ப அளவை கட்டுப்படுத்துவதால் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

சோற்றுக் கற்றாழை ​:

கற்றாழை எல்லோர் வீடுகளிலும் வளர்க்கப்படும் சிறந்த தாவரம். சிறிய வீடுகளில் கூட பாந்தமாய் பொருந்தி கொள்ளும். மூன்றடி வரை வளரக்கூடிய இந்த கற்றாழை ஆன் டி அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. காற்றை சுத்தம் செய்யும் தன்மை கொண்டவை. இவை இருக்கும் இடத்தில் மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம்.காற்றில் இருக்கும் நச்சுக்களை அகற்றவும் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை கட்டுக்குள் வைக்கவும் செய்கிறது. இது இயற்கையாக குளிர்ச்சியாக இருக்கும் இடத்தை வைத்திருக்கும்.

ஸ்நேக் ப்ளாண்ட் ​:

பாம்பு செடி என்று அழைக்கப்படும் இது பொதுவான வீட்டு தாவரம் ஆகும். இது வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. இது சுற்றுச்சூழலின் ஆக்ஸிஜன் அளவை தீவிரமாக மேம்படுத்துகிறது. இதை படுக்கையறையில் வைக்கலாம். கோடைக்காலங்களில் அதிகரிக்கும் வெப்பத்தின் அளவு குறைக்க இவை செய்யலாம். அதிக செலவில்லாத மலிவான தாவரங்களான இவை நீண்ட காலம் வாழக்கூடியவை. இவை வளர்வதற்கு குறைந்த ஒளி இருந்தால் கூட போதுமானது. இவை காற்றில் இருக்கும் நச்சு நீக்கி ஆக்ஸிஜன் அதிகரிக்க செய்கிறது. இது காற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க செய்கிறது.

கோல்டன் போதோஸ்​ :

கோல்டன் போதேஸ் என்பது வீட்டில் இருக்கும் நச்சுக்களையும் தூசிகளையும் வெளியேற்றும் சிறந்த செடிகளில் இதுவும் ஒன்று. மணி பிளாண்ட் என்று சொன்னால் எளிதாக புரியும். இந்த செடி சிறந்த காற்று வடிகட்டுதல் ஆலைகளில் ஒன்று. காற்றை வடிகட்டி வீட்டுக்கு குளிர்ச்சியை தருவதோடு வீட்டில் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கூட அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

அரேகா பனை பச்சை :

அரேகா பனை பச்சை இலைகள் கார்பன் டை ஆக்ஸைடு எடுத்து ஆக்ஸிஜனை வெளியிடும் சிறிய ஸ்டோமாக்களை கொண்டுள்ளன. உள்ளங்கைகள் அமைப்பு போன்று பார்க்கவே அழகாக இருப்பது மட்டும் அல்லாமல் உட்புறத்தில் குளிர்ச்சியை உண்டு செய்கிறது., கோடையை குளிர்ச்சியாக்க இந்த செடி உங்களுக்கு கை கொடுக்கும். அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் செடிகளை வைத்திருக்க விரும்பினால் இவை சரியான தேர்வாக இருக்கும். இதை பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களில் அலங்கார செடியாக பார்க்கலாம்.

இந்த தொட்டிச்செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நாம் இயற்கை முறையில் குளிர்ந்த காற்றை பெறமுடியும். நீங்கள் வீட்டின் வாசலிலோ, பின்புறத்திலோ, அல்லது வீட்டின் மொட்டை மாடியிலோ இந்த செடிகளை வளர்க்கலாம். இவை எப்போதும் உங்களுக்கு சில்லென்ற காற்றை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

Read More : செங்கல்பட்டு கலெக்டருக்கு செக் வைத்த ஐகோர்ட்..!! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் வாரண்ட் பிறப்பிப்பு..!!

English Summary

Let’s take a detailed look at which potted plants will blow cool air and how to grow them.

Chella

Next Post

IPL கோப்பைகளை இதுவரை வென்ற அணிகள்..!! கடைசி வரை போராடும் RCB..!! அறிமுகமான முதல் தொடரிலேயே தட்டித் தூக்கிய குஜராத்..!!

Sun Mar 23 , 2025
The Chennai-Mumbai team in the IPL is a special excitement. CSK has millions of fans because of Dhoni.

You May Like