பிஹாரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது சீவான், பெகுசாரை, பாகல்பூர், ஜெகனாபாத், முஷாபர்பூர், சகர்ஷா, மதேபூரா, சாப்ரா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத்தை அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
கோடைக்காலம் தொடங்கியது முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இடி மற்றும் மின்னல்களினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும் விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் ஊனங்கள் ஏற்படுகின்றன. இடி, மின்னலிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மின்னல் எப்படி உருவாகிறது? இடி, மின்னல் பெரும்பாலும் மனிதனைத் தாக்குவதில்லை. இருப்பினும் சில நேரங்களில் மனிதனின் உடலைத் தாக்கிச் சிறு காயத்திலிருந்து மரணம் வரை ஏற்படுத்துகின்றன. மழைக்காலத்தில் மேகங்களில் மின்சக்தி நிறைந்திருக்கும். சில சமயங்களில் இரண்டு மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் அப்பொழுது ஒரு மேகத்திலிருந்து மின்சக்தி மற்றொரு மேகத்திற்குப் பாயும். இவ்வாறு மின்சக்தி பாயும் போது கண்ணைப் பறிக்கும் ஒளி உண்டாகிறது. இதுதான் மின்னல்.
தவிர்க்க வேண்டியவை:
* மின்னல் ஏற்படும்போது செல்போன், தொலைபேசி, டிவி. மிக்ஸி, கிரைண்டர், கணினியை பயன்படுத்தக்கூடாது.
* உயர் அழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.
* வெட்ட வெளியில் உலோகப் பொருட்களை உயயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது.
* மின்னலின் போது நீரில் இறங்கி நீந்தக் கூடாது. நீரை மின்னல் தாக்கினால் மின்சாரம் நீரின் வழியே உங்களைத் தாக்கும் தெரிந்து கொள்வோம்.. புரிந்து நடப்போம். பகிர்ந்து கொள்வோம்.
* மின்னலின் போது கூட்டமாக சேர்ந்து நிற்கக்கூடாது.
* குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது. அதன் வழியாக மின்சார பாயக்கூடும்.
* ஈரமான மரங்கள் தான் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் மின்னல்களின் போது உயரமான மரங்களில் கீழே நிற்க வேண்டாம் .
* திறந்தவெளியில் நிற்பதை தவிர்க்கவும்.
* கார், பேருந்து உள்ளிட்ட முழுமையாக மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருக்கும்போது இடி.மின்னல் தாக்காது.
Read more: கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு நேரம் நடக்கலாம்.. கர்ப்ப கால நடைப்பயிற்சியின் நன்மைகள் என்னென்ன..?