fbpx

கோடைக்கால வியர்வையும்! பூஞ்சைத் தொற்று அபாயமும்!… நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்!

கோடைக்காலத்தில் நமது உடலில் உண்டாகும் அதிக வியர்வையினால் நகங்களில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க சில வழிமுறைகள் குறித்த வல்லுநரின் குறிப்புகளை பார்க்கலாம்.

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே பல நோய்களையும் கொண்டு வரும். வியர்வை சுரப்பிகளைத் தடுக்க சருமத்தில் இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை வியர்வை அனுமதிக்கிறது. சருமத்தின் அடியில் வியர்வையை சிக்க வைக்கும் ஒரு மென்படலத்தை உருவாக்கி, தனித்துவமான புடைப்புகளை உருவாக்குகிறது. குறிப்பாக நகங்களின் ஆரோக்கியத்தை பற்றி பலரும் அதிக அக்கறை காட்டுவதில்லை. பருவநிலைக்கு ஏற்ப நமது நகங்களிலும் சில மாற்றங்கள் உண்டாகும்.

இதுதொடர்பாக வல்லுநர்கள் கூறியதாவது: நகங்களை சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பேணிக்காப்பது மிகவும் முக்கியமானதாகும். நமது உடலில் உண்டாகும் அதிக வியர்வையினால் நகங்களில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் புற ஊதா கதிர்களினால் நகங்களில் பாதிப்புகள் உண்டாகலாம். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து நகங்களை பாதுகாப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பற்றி பதிவில் பார்ப்போம்.அதிக வியர்வையினால் உண்டாகும் கிருமிகள் நகங்களில் சேர்ந்து நோய் தொற்றுக்களை உருவாக்கலாம். இதனை தடுக்க வெளியிடங்களுக்கு செல்லும்போது கையுறைகளையும், கால்களுக்கு சாக்ஸ் அணிந்து செல்வது, அதிக அளவில் வியர்வை வெளிவரும்போது அவற்றை கிரகித்துக் கொள்ள உதவும்.

மாய்சுரைஸர் பயன்படுத்தி அவற்றை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். இவை புற ஊதா கதிர்களில் இருந்து நகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.நகங்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கு மற்றொரு முக்கிய காரணமாக விளங்குவது நமது உடலில் உள்ள நீர் சத்தாகும். உடலில் நீர் சத்து குறையும் பட்சத்தில் நகங்கள் மிக எளிதில் உடையும் தன்மை உடையதாக மாறிவிடும். எனவே அதிக அளவு தண்ணீர் குடித்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், வயது மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை நமது நகங்களில் ஆரோக்கியத்தை குறைத்து அவற்றை எளிதில் உடையும் படியும், நோய் தொற்றுக்களுக்கள் தாக்கும் வகையிலும் மாற்றி விடுகின்றன.ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் ஆரோக்கியமான நகங்கள் வளர்வதற்கு உதவி செய்கின்றன.

Kokila

Next Post

தினமும் தூங்குவதற்கு முன் தேனுடன் இதை கலந்து சாப்பிடுங்கள்!... இவ்வளவு நன்மைகளா?

Fri Mar 24 , 2023
தினமும் இரவில் தூங்குவதற்கு முன் தேனுடன் மிளகு கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு […]

You May Like