fbpx

கோடைக்காலம்!… மின்சார பயன்பாட்டை குறைக்க!… பஞ்சாப் அரசின் சூப்பர் திட்டம்!…

பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மின் தேவையை சீராக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மின் தேவையை சீராக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வெயில் காலத்தையொட்டி மின்தேவை அதிகரித்துள்ளது. இந்த மின்தேவையை சீராக்கும் வகையில் பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வரும் மே 2 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 2 மணி வரை இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுக்குறித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட வீடியோவில், பஞ்சாபில் மின் தேவை மதியம் 1.30 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்குகிறது. அரசு அலுவலங்களை மதியம் 2 மணிக்கு மூடினால், மின் நுகர்வு அதிகரிப்பதை 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க முடியும். இதுகுறித்து அரசு ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.பஞ்சாப் அரசு அலுவலகங்கள் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இந்த பணி நேரத்தை மே 2 ஆம் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் ஜூலை 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அரசு அலுவலகங்களில் செய்யப்படும் இந்த பணி நேர மாற்றத்தால், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பை குறைக்க முடியும். நானும் எனது அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

எச்சரிக்கை!... பீர் மற்றும் இறைச்சிகளில் கேன்சரை உண்டாக்கும் ரசாயனம்!... ஆய்வில் அதிர்ச்சி!

Wed Apr 12 , 2023
பீர் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரோசமைன்கள் என்ற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன கலவைகள் இருப்பதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி நடத்திய புதிய ஆய்வின்படி, 10 நைட்ரோசமைன்கள், வேண்டுமென்றே உணவில் சேர்க்கப்படவில்லை, ஆனால் அதன் தயாரிப்பு மற்றும் செயலாக்கத்தின் போது உருவாகக்கூடியவை, புற்றுநோய் மற்றும் மரபணு நச்சுத்தன்மை கொண்டவை, அதாவது அவை டிஎன்ஏவை சேதப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நைட்ரோசமைன்ஸ் நுரையீரல், மூளை, […]

You May Like