fbpx

கோடை விடுமுறை!… சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு!… இணையதள டிக்கெட் முன்பதிவு!

கோடை விடுமுறை வர இருப்பதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். இந்நிலையில், கோடை விடுமுறையை ஒட்டி, பொதுமக்களின் வசதிக்காக, சுமார் 500 சிறப்பு பேருந்துகளை சென்னையில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், கோடை விடுமுறை வர இருப்பதால் பொதுமக்கள் பலரும் அதிகமாக வெளியூர் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆகவே, ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல், தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.

சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பேருந்துகளோடு, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பேருந்துகளை அதிகமாக இயக்க உள்ளோம். மேலும், http://www.tnstc.in/ என்ற இணையதளத்தின் வழியாக, டிக்கெட் முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

Kokila

Next Post

குட் நியூஸ்..! குடும்ப பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்...! இன்று வெளியாகும் அறிவிப்பு...!

Mon Mar 20 , 2023
2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொது பட்ஜெட் மின்னணு வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவுள்ளது.

You May Like