fbpx

கோடை விடுமுறை!… குறைந்த செலவில் சுற்றுலா செல்ல ரெடியா?… வங்கிகள் தரும் ஸ்பெஷல் ஆஃபர்கள் இதோ!

கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்லும் வகையில் வங்கிகள் பல்வேறு ஸ்பெஷல் ஆஃபர்களை வழங்குகின்றன. என்னென்ன ஆஃபர்கள் என்று இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.

பொதுவாக கோடை சீசனில் மே மாதம் பிறந்துவிட்டாலே பள்ளி குழந்தைகளுக்கு ஒரே ஜாலி தான். ஏனென்றால் தேர்வுகள் எல்லாம் முடிந்துவிடும், அதேபோல் வெயிலை சமாளிக்கவும் ஒரு மாதம் அளவில் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கும். இந்த கோடை கால விடுமுறையை கழிக்க ஏராளமானவர்கள் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். அதிலும் குளிர் பிரதேசங்கள், மலைப் பிரதேசங்கள் அல்லது வெளிநாடுகளில் பார்வையிடாத இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள். அந்தவகையில் கோடையில் திட்டமிட்டபடி, கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா செல்வது எப்படி என்பது குறித்தும், சுற்றுலா செல்வதற்காக வங்கிகளும் பல்வேறு ஆஃபர்களை வழங்கியது குறித்தும் இதில் பார்க்கலாம்.

சில வங்கிகள் பயண கடன் அட்டைகளை குறிப்பாக சுற்றுலா மற்றும் பயணங்களை விரும்புவோருக்கு வழங்குகின்றன. இவற்றின் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தள்ளுபடிகள், இலவச லவுஞ்ச் அணுகல், பார்ட்னர்ஷிப் பிராண்ட் பலன்கள் மற்றும் பிற பெரிய டீல்களைப் பெறலாம். இந்த ஆண்டு கோடை விடுமுறை பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் செலவினங்களைக் குறைக்கும் சிறந்த பயணக் கடன் அட்டைகளைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்.

பயணத் தேவைகளுக்காக ஸ்டேட் வங்கி, ஏர் இந்தியா இணைந்து இந்த கடன் அட்டையை வழங்குகிறது. இதன் உதவியுடன் ஏர் இந்தியா போர்டல்கள் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் ஏர் இந்தியா டிக்கெட்டுகளில் ஒவ்வொரு ரூ.100க்கும் 30 ரிவார்டு புள்ளிகளைப் பெற முடியும். அதை வைத்து பயண கட்டணத்தில் சலுகை பெற முடியும். அடிக்கடி பறக்கும் திட்டம்-பிளையிங் ரிட்டர்ன்ஸ் மெம்பர்ஷிப் கிடைக்கும். இலவச அணுகல் முன்னுரிமை பாஸ் திட்டம் 600 விமான நிலைய ஓய்வறைகளுக்கு அணுகலை வழங்குகிறது. இதற்கு ஆண்டு கட்டணமாக ரூ.4,999 செலுத்த வேண்டும்.

SBI மற்றும் IRCTC கார்டு : ஐஆர்சிடிசி-எஸ்பிஐ பிரீமியர் கார்டு என்ற பெயரில் கிடைக்கும் இந்த கிரெடிட் கார்டுக்கான வருடாந்திர கட்டணம் ரூ.1,499. இந்த கிரெடிட் கார்டு மூலம் ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் 1 சதவீதமும், விமான டிக்கெட் புக்கிங்கில் 1.8 சதவீதமும் சேமிக்கலாம். ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலம் ஏசி கோச்சுகள் மற்றும் சாதாரண ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், கார்டு வைத்திருப்பவர் மதிப்பில் 10 சதவீதத்தை வெகுமதி புள்ளிகளாகப் பெறுவார். ஆண்டுக்கு எட்டு உள்நாட்டு ரயில்வே லவுஞ்ச் அணுகலைப் பெற முடியும்.

Axis Vistara Signature கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளப் விஸ்டாரா சில்வர் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. இதன் மூலம், நான்கு இலவச பிரீமியம் பொருளாதார டிக்கெட்டுகளை பெறலாம். ஒவ்வொரு ரூ.200க்கும் நான்கு கிளப் விஸ்தாரா புள்ளிகளையும் வழங்குகிறது. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் கார்டுதாரர் இரண்டு இலவச உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகலைப் பெறலாம். இந்த அட்டைக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.3,000 செலுத்த வேண்டும்.

சிட்டி பேங்க்: இந்த வங்கி சிட்டி பிரீமியர் மைல்ஸ் கிரெடிட் கார்டை வழங்குகிறது. இதன் மூலம், உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல், பார்ட்னர் உணவகங்களில் 20 சதவீத தள்ளுபடி, விமானச் செலவுகளுக்காக செலவிடப்படும் ரூ.100க்கு 10 ஏர் மைல் போன்ற பலன்களைப் பெறலாம். இது விமான விபத்துக் காப்பீட்டுத் தொகையையும் உள்ளடக்கும். இந்த அட்டைக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.3,000 வரை ஆகும்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி : இந்த வங்கி ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு EaseMyTrip கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது. EaseMyTrip இணையதளம், ஆப்பில் செய்யும் ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவுகளில் முறையே 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. தனித்தனி ஹோட்டல், விமான இணையதள டிக்கெட் முன்பதிவு செய்ய செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.100க்கும் 10X வெகுமதிகளைப் பெறலாம். மேலும் இது ஒரு காலாண்டிற்கு உள்நாட்டு லவுஞ்ச் அணுகலை உள்ளடக்கியது. இந்த அட்டைக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.350 செலுத்த வேண்டும். பஸ் டிக்கெட் முன்பதிவு செய்தால் ரூ.125 தள்ளுபடி கிடைக்கும்.

Kokila

Next Post

செலரி சாப்பிட்டால் சேலரிக்கு செலவில்லைங்க!... உடல் எடையை குறைக்க உடனடி ரிசல்ட் தரும் சூப்!... சிம்பிள் ரெசிபி!

Tue Apr 18 , 2023
உடலில் கெட்ட கொழுப்பு தேங்குவதைத் தடுத்து உடல் எடையை குறைக்க செலரி தண்டு சூப் மிகவும் நல்ல பலன் தருகிறது. செலரி சூப் செய்யும் முறை குறித்து இதில் தெரிந்துகொள்வோம்! அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு […]

You May Like