fbpx

ஜாலி…! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை…! முழு விவரம்

இன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள், கணிதம், அறிவியல் என அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 88 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 10-ம்வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும். இன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது தொடங்கியுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கல்லூரி விடுமுறை

2023 – 24 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்து கொள்ளலாம். அந்தவகையில், கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Election: தேர்தல் ஆணையத்திடம் பிரச்சாரம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா...?

Tue Apr 9 , 2024
தேர்தல் அறிவிப்பு மற்றும் மாதிரி நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து வெறும் 20 நாட்களில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து 73,379 அனுமதி கோரிக்கைகளைப் பெற்று, அவற்றில் 44,626 கோரிக்கைகளை (60%) சுவிதா தளம் அங்கீகரித்துள்ளது. ஏறக்குறைய 11,200 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இது பெறப்பட்ட மொத்த கோரிக்கைகளில் 15% ஆகும். மேலும் 10,819 விண்ணப்பங்கள் செல்லாதவை அல்லது நகல் என ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 23,239 கோரிக்கைகளும், […]

You May Like