fbpx

புதிய அறிவிப்பு…! 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை…!

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்றுடன் பருவதேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை. 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏப்ரல் 8, 10, 12-ம் தேதிகளில் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். இடைப்பட்ட தினங்கள் அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

அதன்பிறகு, தேர்தல் பணிகள் காரணமாக ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26-ம் தேதி வரை பள்ளிக்கு வருவது அவசியம்.அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான்’..!! கனிமொழி உறுதி..!!

Sat Apr 6 , 2024
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்து முதல் கையெழுத்துப் போடப்படும் என கனிமொழி உறுதிமொழி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி, தனக்கு ஆதரவாக விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கூறுகையில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

You May Like