கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நுங்கு சர்பத் ரெசிபி குறித்து இதில் பார்க்கலாம்.
கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைக்க நீரேற்றம் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. மேலும், உடல் சூடு காரணமாக வயிற்றுப்போக்கு, வயிறு கடுப்பு, நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் அதிகளவில் சிலர் அவதியடைவார்கள். இதனை தடுக்க சுவையாகவும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும் நுங்கு சர்பத் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
நுங்கு சர்பத் செய்ய தேவையான பொருட்கள்: நுங்கு தோலுடன் 4 பீஸ். நன்னாரி சர்பத் – 2 ஸ்பூன், ஐஸ் க்யூப்ஸ் – 2, சிறிதளவு ஐஸ்வாட்டர். செய்முறை: ஒரு கிளாஸில் நுங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும், அதனுடன் நன்னாரி சர்பத் 2 ஸ்பூன் சேர்த்து ஐஸ் க்யூப்ஸ் 2, ஐஸ்வாட்டரை சேர்த்து கலக்கினால் சுவையான நுங்கு சர்பத் ரெடி ஆகிவிடும்.