fbpx

கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை வீடியோ காலில் வரவழைத்து..!! போலி பிடிவாரண்ட்..!! சிக்கிய மேலாளர்..!!

வாட்ஸ் அப் வீடியோ காலில் பெண்ணை வரவழைத்து, அதனை படமெடுத்து உறவினர்களுக்கு அனுப்பி கொலை செய்திடுவேன் என போலியான பிடியாணை பிறப்பித்த நிதி நிறுவன மேலாளரின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் மகாவீர் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடன் வாங்கி, அதில் ஒரு சில தவணை செலுத்த தவறும் பெண்களை குறித்து, அந்நிறுவனத்தின் மேலாளர் போலி கைது நிதி ஆணை பிறப்பித்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

நிதி நிறுவனத்தில் ரூ.16 லட்சம் கடன் வாங்கிய பெண் ஒருவர், ரூ.3 லட்சம் செலுத்திவிட்ட நிலையில், 3 தவணைகள் செலுத்தவில்லை. இதனால், போலி பிடிவாரண்டை பிறப்பித்து, மேலாளர் சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்ணை வற்புறுத்தி வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் வரவைத்துள்ளார். பல நாட்களாக போலி பிடிவாரண்ட் வைத்து மிரட்டியுள்ளார்.

சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்ற பெண்ணுக்கு உண்மை தெரியவந்துள்ளது. வள்ளியூர் காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்கப்பட்டபோது, சரிவர விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது நீதிமன்ற நடவடிக்கையின் பேரில் விசாரணை தொடங்கப்படவுள்ளது. போலி நீதிமன்ற ஆணையை வைத்து மேலாளர் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Read More : ’அவசர சிகிச்சை பிரிவுகளில் எப்போதும் மூத்த மருத்துவர் இருக்க வேண்டும்’..!! ’தனி சட்டம் தேவையா’..? தேசிய பணிக்குழு அறிக்கை..!!

English Summary

The action of the manager of the financial institution who called the woman on WhatsApp video, filmed it and sent it to her relatives and issued a fake arrest warrant has shocked.

Chella

Next Post

மாஞ்சா நூலில் பட்டம் விட்ட மாணவர்கள்..!! குழந்தையின் கழுத்தை அழுத்ததால் பரபரப்பு..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Mon Nov 18 , 2024
A two-and-a-half-year-old boy's neck was injured when he cut mancha thread while riding a two-wheeler on the Vyasarpadi flyover, causing a stir.

You May Like