கோவாவில் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுக்க கோவா சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், விபத்துகளை தவிர்ப்பதற்காக செங்குத்தான பாறைகள் மற்றும் கடல் பாறைகள் போன்ற ஆபத்தான இடங்களில் மக்கள் செல்ஃபி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் போது அல்லது பிகினி உடையோடு சன் பாத் செய்யும் போது அவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களோ, செல்ஃபியா எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவா சுற்றுலா இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வமான ஹோட்டல்கள், வில்லாக்கள், தங்கும் இடங்களை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கடற்கரை போன்ற திறந்தவெளி பகுதிகளில் மது அருந்துவது தடை செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மீறினால் தண்டனைக்குரிய குற்றம் எனவும் கோவா சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.