சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனத்தின் ஸ்பேஸ் ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி யைமத்திற்கு சென்றிருந்த நிலையில், தற்போது அவர் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்.
மனித குல வரலாற்றில் விண்வெளி ஆய்வுகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே, இந்த ஆய்வுகளுக்கு சர்வதேச நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. வழக்கமாக தனது சொந்த ராக்கெட்டில் விண்வெளி வீரர்களை அழைத்து சென்று பூமிக்கு திரும்பும் நாசா, இம்முறை தனியார் ராக்கெட்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த வகையில், பிரபல வினாம தயாரிப்பு நிறுவனமாக போயிங் தனித்துவமான ராக்கெட்டையும் அதனும் ‘ஸ்டார் லைனர்’ எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது.
இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, (ஜூன் 7) ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இது சுனிதா வில்லியம்ஸ்ஸுக்கு 3-வது பயணமாகும். ஆனால், இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை ஸ்டார் லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜூன் 7ஆம் தேதியே சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் கடந்த 14ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. அதன்படி, ஜூன் 26ஆம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.
இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் மற்றும் ஹீலியம் வாயு கசிவு ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும். இதையடுத்து, ஜூலை 2ஆம் தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு 2 வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள் என போயிங் தெரிவித்துள்ளது. ஆனால், நாசா இன்னும் இதனை உறுதி செய்யவில்லை. நாசா உறுதி செய்து அறிவித்தால்தான் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.
Read More : ”இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை இதுதான்”..!! முதல்வரை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை..!!