fbpx

சுனிதா வில்லியம்சுக்கு கூடுதல் சிறப்பு சம்பளம்!. எனது சொந்த பணத்தில் இருந்து தருவேன்!. அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Trump: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், அவர்களுக்கு எனது சொந்த பணத்தில் இருந்து சம்பளம் வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 பேரும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 19-ந்தேதி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். வெறும் 8 நாள் பயணமாக சென்றவர்கள் விண்கலம் செயலிழந்ததால் 286 நாட்கள் அங்கேயே இருந்தனர். அதாவது, திட்டமிட்டதை விட கூடுதலாக 278 நாட்கள் அவர்கள் விண்வெளியில் இருந்தனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி டிரம்பிடம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியில் கூடுதல் காலம் தங்கியிருந்ததற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “இதை யாரும் என்னிடம் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால், நான் அதை எனது சொந்த பணத்தில் இருந்து கொடுப்பேன்” என கூறினார். மேலும் அவர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்தார். இதனிடையே விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு நாள் ஒன்று 5 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.430) சிறப்பு சம்பளமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Readmore: தமிழ்நாட்டில் 2030 வரை பிரச்சனை இல்லை; தேவையான மின்சாரம் இருப்பு உள்ளது!. செந்தில் பாலாஜி பதில்!

English Summary

Sunita Williams to get extra special salary! I will pay it from my own money! President Trump’s announcement!

Kokila

Next Post

ஆன்லைன் பண கேமிங் செயலியை பயன்படுத்த வேண்டாம்....! மத்திய அரசு எச்சரிக்கை...!

Sun Mar 23 , 2025
Do not use online money gaming apps....! Central government warns.

You May Like