ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன் மழை பொழிந்து வருகிறது. முதல் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடி ரன் குவித்தனர். 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன் எடுத்திருந்தது. அபிஷேக் ஷர்மா 24 ரன்களில் அவுட்டானாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் அடுத்து ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இந்தப் போட்டியில் பவர் ப்ளேயில் அதிக ரன்கள் எடுத்த 5-வது அணி என்ற ரெக்கார்ட் படைத்தது சன் ரைசர்ஸ் அணி. 2024-ம் ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி டெல்லி அணிக்கு எதிரான பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 125 ரன் எடுத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.