தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து 78 நாட்கள் ஊதியத்தொகையை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் 12-வது ஆண்டாக இந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியத் தொகையை தீபாவளி போனஸாக அறிவித்துள்ளது.

ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஒரு ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 போனஸாக வழங்கப்படும். மத்திய அரசின் அறிவிப்பால், ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு மொத்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.