புதிய வீடுகள் அல்லது கட்டிடங்கள் கட்டுபவர்களுக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது
அதன்படி, தங்களுடைய கட்டுமானப் பகுதிகளுக்கு அருகில் மின்கம்பம் அல்லது மின்கம்பியை வைத்திருக்கும் நபர்கள், TANGEDCOல் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பாதுகாப்பு சரிசெய்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக https://www.tangedco.org/en/tangedco
என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம்.
இதன் மூலம் எதிர்காலத்தில் மின் கம்பங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க முடியும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சாத்தியமான அபாயங்களை தடுப்பதற்கும், எதிர்காலத்தில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், கோவை பகுதியில் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான 765/400 கிலோ வாட் துணை மின் நிலைய திட்டத்தையும், அரியலூர் வரை நீட்டிக்கப்படும் மின்சார பரிமாற்ற பாதையையும் செயல்படுத்துவதற்கு ஆலோசகரை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.