தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் உள்ள 1,020-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மாவட்டம் மற்றும் காலியிடங்கள்…
செங்கல்பட்டு – 45, கோயம்புத்தூர் – 119, கள்ளக்குறிச்சி – 54, மதுரை – 86, நாகை – 69, பெரம்பலூர் – 61, புதுக்கோட்டை – 114, சிவகங்கை – 41, தென்காசி – 10, தஞ்சாவூர் – 140, திருச்சி – 119, திருப்பத்தூர் – 31, திருப்பூர் – 126, விருதுநகர் – 13
வயது வரம்பு: அதிகபட்சம் 50 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டம் மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள்:
செங்கல்பட்டு – 27.01.2023
கோவை – 30.01.2023
கள்ளக்குறிச்சி – 25.01.2023
மதுரை – 27.01.2023
நாகை – 20.01.2023
பெரம்பலூர் – 27.01.2023
புதுக்கோட்டை – 27.01.2023
தென்காசி – 19.01.2023
தஞ்சாவூர் – 30.01.2023
திருச்சி – 31.01.2023
திருப்பத்தூர் – 25.01.2023
திருப்பூர் – 30.01.2023
விருதுநகர் – 25.01.2023
சிவகங்கை – 27.01.2023
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.