fbpx

சூப்பர் அறிவிப்புகள்..! குஜராத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கும் ராகுல் காந்தி..! என்னென்ன தெரியுமா?

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அதில் பேசிய அவர், ”குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.

சூப்பர் அறிவிப்புகள்..! குஜராத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கும் ராகுல் காந்தி..! என்னென்ன தெரியுமா?

தொடர்ந்து பேசிய அவர், தற்போது குஜராத்தில் ரூ.1060க்கு விற்கப்படும் சிலிண்டர்கள் ரூ.500க்கு விற்கப்படும் எனவும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், வருகிற ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Chella

Next Post

ஜார்கண்ட்டில் நம்பிக்கை தீர்மானத்தில் ஹேமந்த் வெற்றி….முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார் ஹேமந்த்….ஹேமந்துக்கு ஆதரவாக 48 வாக்குகள் …பா.ஜ.வின் ஆட்டம் செல்லாது…

Mon Sep 5 , 2022
ஜார்கண்டில் நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் ஹேமந்த் 48 ஆதரவு வாக்குகள் பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் முக்திமோர்ச்சா மற்றும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சியின் ஐ.மு. கூட்டணியில் ஆட்சி நடந்து வருகின்றது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகையை எடுத்ததாக பா.ஜ.வினர் குற்றம் சாட்டினர். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று கூறினர். இது பற்றி […]

You May Like