fbpx

பத்திரப் பதிவுத்துறையில் சூப்பர் மாற்றம்..!! இனி அந்த சிரமம் வராது..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக பத்திரப்பதிவு துறை எடுத்து வருகிறது. ஆன்லைனிலேயே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகிவிட்டதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இதுகுறித்து, நில அளவைத் துறை இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், “1.42 கோடி நத்தம் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் ஆவணங்கள், பல்வேறு கட்ட சரிபார்ப்புக்கு பின், தற்போது தமிழ்நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இ – சேவை இணையதளம் மூலம், தமிழ்நிலம் தகவல் தொகுப்பில், நத்தம் நில ஆவணங்களை பொதுமக்கள் பார்க்கலாம். இ – சேவை மையங்கள் வாயிலாக, நத்தம் நில பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வழிகாட்டுதல்களை அலுவலர்கள் கடைபிடிப்பதை ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். நத்தம் நில பட்டா மாறுதலுக்கு மக்கள், இ – சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்காக பொதுமக்களை தாலுகா அலுவலகங்களுக்கு வரும்படி அலைக்கழிக்கக் கூடாது” என்று கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதுபோலவே, சொத்து விற்பனையின்போதும், பொதுமக்களை அலைக்கழிக்க விடாதவாறு அவர்களின் வசதிக்காகவே இன்னொரு அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது வழக்கமாக, சொத்து விற்பனையின்போது, வழிகாட்டி மதிப்பை குறிப்பிடாவிட்டால், அந்த பத்திரம் தனித்துறை கலெக்டர் விசாரணைக்கு அனுப்பப்படும். இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை, இதுவரை சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் நடந்து வந்தன. ஆனால், தற்போது, மண்டல அலுவலகங்களில், இந்த விசாரணையை முடிக்க, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்துள்ளாராம்.

இதற்கு காரணம், நில மதிப்பு நிர்ணயிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளில், மேல்முறையீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த மனுக்கள் தொடர்பாக விசாரணை சென்னையில் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சென்னைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறதாம். எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காகவே, மண்டல அளவில் விசாரணை நடத்த முயற்சி திட்டமிட்டு வருவதாகவும், இதற்கு பிறகே மற்ற மண்டலங்களிலும் இந்த விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : செம குட் நியூஸ்..!! லைசென்ஸ் வாங்க இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீட்டிற்கே வந்துவிடும்..!!

Chella

Next Post

சென்னையில் பலமடங்கு எகிறிய கட்டணம்!… ரூ.10,000 வரை உயர்வு!

Mon Apr 15 , 2024
Flight Ticket: கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற்று முடியும் நிலையில், மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை மக்கள் தங்களுடைய சுற்றுலா பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் […]

You May Like