மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பணி பெயர் : Accountant
தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசுக்கு கீழ் இயங்கிவரும் நிறுவனத்தில் துறைசார்ந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level – 05 முறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை : Deputation முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.01.2024