fbpx

சூப்பர்..!! பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) வங்கியில் காலியாக உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் விவரங்கள்:

தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்), சீனியர் மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்), மேனேஜர் (கிரெடிட் ஆபீசர்)

கல்வி தகுதி:

  • தலைமை மேலாளர் (பட்டய கணக்காளர்) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
  • டிகிரி படித்திருந்தால் சீனியர் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.
  • மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • தலைமை மேலாளர் பதவிக்கு ரூ.76,010 முதல் ரூ.89,890 வரை மாத சம்பளம்.
  • சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.63,840 முதல் ரூ.78,230 வரை மாத சம்பளம்.
  • மேனேஜர் பதவிக்கு ரூ.48,170 முதல் ரூ.69,810 வரை மாத சம்பளம்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு, குழுமுறையில் கலந்துரையாடல், தனிப்பட்ட நேர்காணல்.

விண்ணப்பிப்பது எப்படி..?

அதிகாரப்பூர்வ இணையதளமான www.unionbankofindia.co.in ஐ பார்வையிடவும்.

பின்னர், “Recruitment” பகுதிக்கு செல்லவும்.

இப்போது, “Click Here to Apply Online for Manager, Chief Manager and Senior Manager Posts” என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்களை பதிவு செய்து உள்நுழையவும். தேவையான விவரங்களை நிரப்பி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கவும்.

Chella

Next Post

அடுத்தடுத்து மீட்கப்பட்ட 7 சடலங்கள்..!! உயிரைப் பறித்த உறவினர்கள்..!! சிறு காயங்கள் கூட இல்லாமல் நடந்த கொலை..!!

Thu Jan 26 , 2023
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே தௌந்த் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பீமா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் கடந்த 18ஆம் தேதியன்று சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, 20, 22 ஆகிய தேதிகளில் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, மேலும் 3 குழந்தைகளின் சடலங்களையும் ஆற்றில் இருந்து போலீசார் மீட்டனர். உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் அருகே இருந்த செல்போன் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த செல்போன் […]
அடுத்தடுத்து மீட்கப்பட்ட 7 சடலங்கள்..!! உயிரைப் பறித்த உறவினர்கள்..!! சிறு காயங்கள் கூட இல்லாமல் நடந்த கொலை..!!

You May Like