fbpx

சூப்பர் குட் நியூஸ்..!! பத்திரப்பதிவு கட்டணம் அதிரடி குறைப்பு..!! சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அறிவிப்பு..!!

நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. பட்ஜெட் உரை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பதிவுத்துறை கட்டணம் 4 சதவிகிதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். நிலம் வாங்கும் ஏழைகளின் சுமையை போக்க பதிவுத்துறை கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்படும் என்றும் அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். ஓய்வூதியதாரர்கள் குடும்ப நலன் கருதி சிறப்பு நிதியாக கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.

Chella

Next Post

கள்ளக்காதலனுடன் வாழ்ந்து கொண்டே வேறொருவருடன் கள்ளக்காதல்..!! கடைசியில் நடந்த அதிர்ச்சி.!!

Mon Mar 20 , 2023
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செகனஸ். இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். செகனஸ்சின் நிலையை அறிந்து கொண்ட தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதேஷ் என்பவர், செகனஸிடம் ஆசைவார்த்தை கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், செனஸ்க்கு […]

You May Like