இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் 400 நாட்கள் அமலில் இருக்கும் எனவும் இதன் மூலமாக பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு 7.75 சதவீதம் வட்டியும், சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு 8 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் IND SUPER 300 DAYS திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியது. இது 300 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக 5 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் இதில் பொதுவாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவீதமும், சீனியர் சிட்டிசனுக்கு 7. 55 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.80 சதவீதம் வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.