fbpx

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இதை செய்தால் ரூ.7 லட்சம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஆன்லைன் பிஎஃப் மற்றும் ஓய்வூதிய பேமெண்ட்களுக்கு இபிஎஃப் பணியாளர்கள் இ-நாமினேஷன் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கியுள்ள UAN எண் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களின் விவரங்களை இபிஎஃப் வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே அவர்களுக்கான பலன் கிடைக்கும். பணியாளர்களின் முதலீட்டுடன் இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு கிடைக்க இது உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு நபரும் தங்கள் தேவைக்கு ஏற்ப வாரிசுதாரரை நியமனம் செய்து கொள்ளலாம். எனினும், திருமணத்திற்குப் பிறகு அது கட்டாயமாகும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரரை இணைக்க சுய-சான்று ஒன்றே போதும். வேலை வழங்கும் நிறுவனம் சார்பில், அதற்கு ஆவணம் அல்லது ஒப்புதல் எதுவும் தேவை இல்லை. இபிஎஃப் வாடிக்கையாளர்கள் பணி செய்யும் காலத்தில் இறக்க நேர்ந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதாரர்களுக்கு இந்தத் தொகை கிடைக்கும். வருமானம் ஈட்டும் நபரின் மறைவுக்குப் பிறகு, இந்தத் தொகையானது குடும்பத்தினருக்கு பேருதவியாக இருக்கும்.

இதில் சர்வீசஸ் என்ற செக்சனுக்கு சென்று ‘ஃபார் எம்பிளாயர்ஸ்’ என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது மற்றொரு பக்கத்திற்கு நீங்கள் ரீ-டாரக்ட் செய்யப்படுவீர்கள். இப்போது மெம்பர் UAN / ஆன்லைன் சர்வீஸ் என்பதன் மீது கிளிக் செய்ய வேண்டும். இப்போது UAN நம்பர் மற்றும் பாஸ்வர்ட் உதவியுடன் லாக் இன் செய்யவும். இ- நாமினேஷன் (E-nomination) என்ற ஆப்சன் கீழ் உள்ள மேனேஜ் டேப் என்பதை தேர்வு செய்யவும்.

புரொவைட் டீடெய்ல்ஸ் என்ற டேப் இப்போது திறக்கப்பட்டிருக்கும். இதில் சேவ் என்பதை கொடுக்கவும். குடும்ப விவரங்களை அப்டேட் செய்ய YES கொடுக்கவும். ஆட் ஃபேமிலி டீடெய்ல்ஸ் (Add family details) என்பதை கிளிக் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரரை நீங்கள் நியமித்துக் கொள்ளலாம். நாமினேஷன் டீடெய்ல்ஸ் என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு வாரிசுதாரருக்குமான பங்களிப்பு சதவீதத்தை குறிப்பிட வேண்டும். பிறகு சேவ் இபிஎஃப் நாமினேஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஓடிபி உருவாக்குவதற்காக இ-சைன் என்பதன் மீது கிளிக் செய்ய வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் சப்மிட் செய்யவும். இப்போது இபிஎஃப்ஓ உடன் இ-நாமினேஷன் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும். இதைச் செய்த பிறகு ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டிய தேவை இருக்காது. ஆன்லைன் மூலமாக நீங்கள் கிளைம் பெற முடியும்.

Read More : 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா..? மாணவர்களே கவலை வேண்டாம்..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிடலாம்..!! தேதி அறிவிப்பு..!!

Chella

Next Post

மது அருந்திய பின் இந்த உணவுகளை நீங்கள் தொடவே கூடாது..!! காத்திருக்கும் ஆபத்து..!!

Sat May 11 , 2024
மது அருந்துபவர்கள், மதுவுடன் சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இறைச்சி மற்றும் முட்டை: மது அருந்தும்போது சிலர் அசைவ உணவுகளையும், முட்டையையுமே […]

You May Like