fbpx

மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு கியூட் நுழைவுத் தேர்வு கட்டாயமாகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கியூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பலர் விண்ணப்பிக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

2023இல் கியூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் மார்ச் 30ஆம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பணம் செலுத்துவதற்கான நடைமுறையை இரவு 11.50 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் தேர்வு விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 வரை திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in-ஐ பார்வையிடலாம். மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

வேறொரு பெண்ணுடன் தொடர்பு..!! இளைஞர் மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலி..!! ஈரோட்டில் பயங்கரம்..!!

Sun Mar 12 , 2023
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கார்த்திக் (26). இவர், சம்பவத்தன்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து, தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறினார். ஊழியர்கள் பார்த்த போது தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டு கருகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனே முதலுதவி அளித்த நிலையில், பின்னர் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு […]

You May Like