fbpx

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி ரயில் நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகள்..!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதிக பயணிகள் ரயிலில் செல்வதால் ரயில்வே துறை புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் இனி ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களில் உயிர்காக்கும் மருந்துகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்றவைகள் கிடைக்கும் என தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ரயிலில் டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், காவலர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு முதலுதவி கொடுக்க பயிற்சி கொடுக்கப்படும் என்றும் அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் தொலைபேசி நம்பர்கள் அடங்கிய பட்டியல் அனைத்து ரயில் நிலையங்களிலும் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த புதிய திட்டம் தற்போது ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை‌ பெற்றுள்ளது.

Chella

Next Post

’உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லையா’..? களமிறங்குகிறது தொடக்கக்கல்வித்துறை..!!

Mon Apr 3 , 2023
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ”தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை (மாற்றுத்திறன் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய ஆண்டுதோறும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், கண்டறியப்படும் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் […]

You May Like