fbpx

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை..!!

புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் 2 ஆண்டுகளில் வெறிநாய் கடியால்
ஏற்படும் ரேபிஸ் நோயை முடிவுக்கு கொண்டு வர மாநில செயல் திட்டத்தை
செயல்படுத்த இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கி வைத்தார். இதில், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன்
மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர், ”புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8. 45 முதல் காலை 10. 45 வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்றும் இதற்கான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கோப்புக்கு அனுமதி அளித்துள்ளாதாக தெரிவித்தனர்.

மேலும், சிறப்பு அனுமதி மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தனர். பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம்.
மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை/அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் இப்படி ஒரு கோவிலா..? பக்தர்களுக்கு மதுவை பிரசாதமாக தரும் சுவாரஸ்ய நிகழ்வு..!!

Fri Apr 28 , 2023
இந்தியாவில் லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன. அதில் ஒரு சில கோயில்கள் அதன் கட்டுமான அழகியலால் பிரபலமாகும். ஒரு சில கோயில்கள் அதன் சொத்து மதிப்பில் பிரபலமாகும். ஒரு சில கோவில்களை அதன் வழிபாட்டு தெய்வங்களால் பிரபலமாகும். மிக சில கோவில்கள் தான் வழிபாடு முறைகளால் தனித்துவம் பெரும். அப்படி ஒரு கோவில் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் ஒரு மர்மமான பழங்கால கால […]
இந்தியாவில் இப்படி ஒரு கோவிலா..? பக்தர்களுக்கு மதுவை பிரசாதமாக தரும் சுவாரஸ்ய நிகழ்வு..!!

You May Like