fbpx

சூப்பர் குட் நியூஸ்..!! ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ.6,000..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என்றும் குடும்ப அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாநகராட்சி, நகராட்சியில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Thu Feb 8 , 2024
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நகராட்சி துறையில் காலியாகவுள்ள 1,933 பணியிடங்களுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு […]

You May Like