fbpx

உடலில் நோயின்றி வாழ சூப்பரான ஹெல்த் டிப்ஸ்..!! இதை மட்டும் ஃபாலோ பண்ணி பாருங்க..!! உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..!!

பொதுவாக ஒருவர் உடலில் எந்தவித நோயுமின்றி வெகு காலம் வாழ்ந்து மடிந்தால் நாம் சொல்லும் ஒரே விஷயம் அவன் ஜாதகம் அப்படி, ராசி அப்படி, அவன் பிறந்த நேரம் அப்படி என்று சொல்வதுண்டு. ஆனால், இவையெல்லாம் கடந்த ஒரு விஷயம் உள்ளது. அதனை யாரும் கருத்தில் கொள்வதில்லை. நாம் எப்போதும் உடலில் நோய் இன்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இதனை யாரும் தற்போது கருத்தில் கொள்வதில்லை.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கு முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். இதனை நம்முடைய பெரியவர்கள் அடிக்கடி சொல்லி கேட்டிருக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. உணவு முறை மட்டுமல்லாமல் ஒரு சில செயல்முறைகளும், நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அப்படி எல்லோரும் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒரு வேலையாவது நிலத்தில் அமர்ந்து உணவு உண்ண பழகிக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு மனிதனுக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கிறது என்றால் அந்த மனிதன் பல இன்னல்களை சந்தித்த நேரலாம். ஆனால் அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது, இது உடலில் செரிமானத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது நம்முடைய அன்றாட அனைத்து வேலைகளிலும் இருந்து விடுபட்டு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும்.

ஓய்வு என்றால் கைபேசிகளை நோண்டிக்கொண்டிருப்பதோ அல்லது வெறுமனே அமர்ந்து கொண்டு ஏதாவது வேலைகளை செய்து கொண்டிருப்பதோ அல்ல, ஓய்வு என்றால் முழுமையான ஓய்வு, காது, கண், மூக்கு, வாய் உள்ளிட்ட ஐம்புலன்களுக்கும் முழுமையான ஒய்வு வழங்க வேண்டும். மேலும், இரவு நேரத்தில் சற்று நேரம் நடை பயிற்சி பயில்வது மிகவும் நல்லது. பெரும்பாலும் பொதுமக்கள் ஒரு நாளில் தொடக்கத்தில் டீ அல்லது காபியுடன் அந்த நாளை தொடங்குவார்கள். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் குடித்து அதன் பிறகு ஒரு நாளை தொடங்க வேண்டும். இது ஒருவரின் செரிமானத்தை அதிகரிக்கும். அதோடு மட்டுமல்லாமல் உடலை நல்ல ஆற்றலோடு வைத்திருக்கும்.

அதோடு, நாள்தோறும் அனைவரும் வாழ்த்து விளக்குவது அன்றாட நிகழ்வு தான். அதேபோல நாள்தோறும் அனைவரின் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும், இது மிக மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது. அதோடு சருமத்தில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு மசாஜ் செய்வது நல்லது. இதன் காரணமாக, சருமத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்கும். ஆனாலும் இதனை நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

Read More : ஈரோடு மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!!

English Summary

A healthy and hygienic diet plays a very important role in ensuring that we always remain healthy and disease-free.

Chella

Next Post

தொப்புளில் மஞ்சள் தடவுவதால் இவ்வளவு நன்மைகளா..? மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்..!!

Sun Feb 2 , 2025
Here's how applying turmeric to the navel benefits us. How to use it, and when and how to apply turmeric to the navel.

You May Like