fbpx

இன்று ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்..!! அட இந்த படமும் இன்னைக்குதானா..? லிஸ்ட் இதோ..!!

அடுத்த வார லியோ திரைப்படம் வருவதால், இந்த வாரம் திரையரங்குகளில் பெரிய படம் எதுவும் வெளியாகவில்லை.

Mark Antony (Tamil) Prime – Oct 13

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்த திரைப்படம் தான் `மார்க் ஆண்டனி’. டைம் ட்ராவல் செய்து மற்றவர்களுடன் உரையாடச் செய்யும் ஒரு போன், அது ஹீரோ கையிலும், வில்லன் கையிலும் சிக்கும் போது நடக்கும் கலாட்டாங்கள் தான் கதை. இப்படம் அமேசன் பிரைமில் இன்று வெளியாகிறது.

Akku (Tamil) – Oct 13

ஸ்டாலின் இயக்கத்தில் பிரஜின் நடித்திருக்கும் படம் `அக்கு’. தொடர் கொலைகள் நடக்கிறது. அதில் குற்றவாளியாக சந்தேகித்து ஹரீஷ் கைதாகிறார். நிஜமாக கொலைகள் செய்வது யார்? ஹரீஷுக்கு என்னாகிறது என்பதே இப்படத்தின் கதை.

Goosebumps (English) Hotstar – Oct 13

R. L. Stine எழுதிய ’Goosebumps’ நாவல் அதே பெயரில் சீரிஸாக உருவாக்கப்பட்டுள்ளது. 5 மாணவர்கள், அமைதியாய் இருந்த பூதத்தை கிளப்பி விடுகிறார்கள். அதன் பின் நடக்கும் அமானுஷ்யங்களும், அதைத் தடுக்க முயலும் போராட்டமும் தான் இந்த படத்தின் கதை.

Everybody Loves Diamonds (Italian) Prime – Oct 13

Gianluca Maria Tavarelli இயக்கியிருக்கும் இத்தாலிய மொழி சீரிஸ் `Everybody Loves Diamonds’. விலைமதிப்பு மிக்க வைரத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு குழு. அவர்களின் திட்டம் வெற்றியடைந்ததா இல்லையா என்பதுதான் கதை.

Prema Vimanam (Telugu) Zee5 – Oct 13

Santosh Kata இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Prema Vimanam’. விமானத்தில் பயணிக்க வேண்டும் எனக் கனவுடன் இருக்கும் 2 சிறுவர்கள் ஒருபுறம், அவசரமாக விமானத்தைப் பிடிக்க செல்லும் ஒரு இளம் தம்பதி மறுபுறம். இவர்களின் பாதை ஒன்றோடு ஒன்று குறுக்கிடும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.

The Burial (English) Prime – Oct 13

Jamie Foxx மற்றும் Tommy Lee Jones நடித்திருக்கும் படம் `The Burial’. இறுதிச்சடங்குகளை நடத்தி வைக்கும் மையத்திற்கு ஒரு பிரச்சனை. அதை நடத்திவரும் குடும்பத்தை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற வழக்கறிஞர் ஒருவர் போராடுகிறார். இதுவே இப்படத்தின் கதை.

Kasargold (Malayalam) Netflix – Oct 13

மிர்துள் நாயர் இயக்கத்தில் உருவான மலையாளப்படம் `Kasargold’. ஆல்பர்ட், ஃபைசல் இருவரும் ஒரு கொள்ளைக்கு திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.

Chella

Next Post

ஆஹா!… இப்படியொரு உலக சாதனையா?… பிறந்த 2 மாதத்தில் கின்னஸ் சாதனை படைத்த குழந்தை!

Fri Oct 13 , 2023
மத்திய பிரதேசத்தில் பிறந்து 70 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நந்தன் – பிரியங்கா தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு சரண்யா என்று பெயரிட்ட  பெற்றோர், குழந்தையை  உலகம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கக்கூடிய அளவுக்கு  சாதனை ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர். அதற்காக குழந்தைக்கு […]

You May Like