fbpx

தங்கம் வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்… இன்று திடீரென குறைந்தது விலை!

பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் சுப முகூர்த்தங்கள், தீபாவளிப் பண்டிகை என விசேஷங்கள் வரவுள்ள சூழலில், தங்கம் விலை இனி உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ.43,840-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ. 25 குறைந்து ரூ.5,480 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து, ரூ. 77 என்றளவில் உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை, ரூ. 77 ஆயிரம் ஆக விற்கப்படுகிறது. இந்த விலை நிலவரம், மற்ற நகரங்களில் சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

”இந்த கேள்வி எனக்கு பொருந்தாது”..!! ”என்கிட்ட கேட்காதீங்க”..!! கனடா விவகாரத்தில் கொந்தளித்த அமைச்சர் ஜெய்சங்கர்..!!

Wed Sep 27 , 2023
இந்தியா-கனடா இடையேயான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தான். இவர் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார். இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் தான் கனடா […]

You May Like