fbpx

நகைப்பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது..!!

கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். குறிப்பாக, கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சவரனுக்கு 960 ரூபாய்க்கும் மேல் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதற்கிடையே, இன்று வர்த்தகம் துவங்கியதும் தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்தது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,945 ரூபாயாகவும், ஒரு சவரன் 47,560 ரூபாயாகவும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் 5,910 ரூபாயாகவும், சவரனுக்கு 260 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 47,280 ரூபாயாகவும் விற்பனையாகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 6,380 ரூபாய்க்கும், சவரனுக்கு 260 ரூபாய் குறைந்து 51,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் குறைந்து 79.70 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 79,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை கணிசகமாக குறைந்துள்ளது.

Chella

Next Post

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அலைமோதும் கூட்டம்..!! போலீசார் பலத்த பாதுகாப்பு..!!

Fri Dec 29 , 2023
நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் விஜயகாந்த். இருப்பினும் அவரது தேமுதிக கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு நல்ல […]

You May Like