fbpx

பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! ரயில்களில் இனி புதிய உணவு வகைகள்..!! என்னென்ன தெரியுமா..?

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கைக்குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! ரயில்களில் இனி புதிய உணவு வகைகள்..!! என்னென்ன தெரியுமா..?

இந்த உணவு வகைகளில் பருவகால சுவையான உணவுகள், பண்டிகை கால உணவுகள், விருப்பங்களுக்கு ஏற்ப உணவுப் பொருட்களும் உள்ளடங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தைகளுக்கான உணவுகள், ஆரோக்கிய உணவு விருப்பங்கள், ஊட்டசத்து மிக்க உள்ளூர் தயாரிப்புகள் உட்பட பயணிகள் விருப்பத்திற்கேற்ப உணவுகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த புதிய உணவு வகைகள் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது”என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இனிமே தான் ஆட்டமே இருக்கு’..!! தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை

Wed Nov 16 , 2022
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெளுத்து வாங்கிய மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழியில் 44 செ.மீ அளவிற்கு மழை பெய்ததால், நெற்பயிர்கள் நீரில் […]
’இனிமே தான் ஆட்டமே இருக்கு’..!! தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை

You May Like