fbpx

ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! இனி உங்களுக்கு இந்த பிரச்சனையே இருக்காது..!! வெளியான முக்கிய தகவல்..!!

நாட்டில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் லோக்கல் ட்ரெயின் சேவை என்பது மிகவும் பரபரப்பானது டிக்கெட் செலவு குறைவு. மேலும், வேகமாக பயணிக்கலாம் என்பதை தாண்டியும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காகவே நிறைய பேர் லோக்கல் ட்ரெயின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் இல்லாததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச் சீட்டை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் 284 ரயில் நிலையங்களில் தானியங்கி பயண சீட்டு இயந்திரங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சென்னை கோட்டத்தில் 96, மதுரை கோட்டத்தில் 46, திருச்சி கோட்டத்தில் 12, சேலம் கூட்டத்தில் 12, திருவனந்தபுரம் கோட்டத்தில் 50 மற்றும் பாலக்காடு கோட்டத்தில் 384 தானியங்கி பயணச் சீட்டுகள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது திருச்சி கோட்டத்தில் 7, மதுரை கோட்டத்தில் 16, சென்னை கோட்டத்தில் 34, சேலம் கோட்டத்தில் 13, பாலக்காடு கோட்டத்தில் 15, திருவனந்தபுரம் கோட்டத்தில் 14 என 99 ரயில் நிலையங்களில் தானியங்கி பயண சீட்டு இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Chella

Next Post

மறைந்தார் மயில்சாமி..!! நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி..!!

Mon Feb 20 , 2023
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் காலமானார். 57 வயதாகும் மயில்சாமி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி […]

You May Like