ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது, கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்டுகளில் 10 ஆண்டுகள் வரை நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதில், சீனியர் சிட்டிசன்களுக்கு மற்றவர்களை விட அதிக வட்டி கிடைக்கும் என்பதால் இந்த திட்டங்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக இருக்கிறது.
இந்நிலையில், ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வட்டி விகிதம் 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பெடரல் வங்கி சமீபத்தில் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.