இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 526 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் முழு விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
உதவியாளர் | 342 |
ஜீனியர் தனி உதவியாளர் | 154 |
மேல் பிரிவு கிளர்க் | 16 |
ஸ்டெனோகிராஃபர்ஸ் | 14 |
வயது வரம்பு :
09.01.2023 படி 28 வயது வரை இருக்க வேண்டும். OBC 31 வயது மற்றும் SC/ST 33 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
இந்த பணிகளுக்கு ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
உதவியாளர், மேல் பிரிவு கிளர்க் பணிகளுக்கு ஏதேனும் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கணினி திறன்.
ஜீனியர் தனி உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராஃபர்ஸ் பணிகளுக்கு 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது வணிகம்/ செயலக நடைமுறை ஆகிய பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ மற்றும் 1 வருட ஸ்டெனோகிராஃபர்ஸ் அனுபவம்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.ursc.gov.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 09.01.2023
கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 11.01.2023