fbpx

கிராமப்புற இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! சகல வசதிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institutes) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி மூலம் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவை ஊக்கப்படுத்திட வங்கிக்கடன் இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊரக இளைஞர்களுக்கு சுயவேலை செய்யவும், தொழில்களை தொடங்கவும் மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி நிலையத்தையாவது தொடங்க வேண்டும் என்பது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! சகல வசதிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் CCTV இன்ஸ்டாலேஷன் & சர்வீஸிங் பயிற்சி மற்றும் பெண்களுக்கான சணல் பை தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். எவ்வித கட்டணமும் இன்றி 100% செய்முறை பயிற்சி, சீருடை, 3 வேளையும் உணவு, விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கிக்கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு வரும் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், 18ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.

தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல் (TC), 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, வங்கி கணக்குபுத்தக நகல், இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் செய்ய தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்: 9944850442, 7539960190, 9626644433

மேலும் விவரங்களுக்கு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பின்புறம்). திருச்சி மெயின் ரோடு பயிற்சி நிறுவனம் (RTO அலுவலகம் பின்புறம்). கீழப்பழூர். அரியலூர்-621707. 04329-250173 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

Chella

Next Post

நிலத்தரகரை ஓட ஓட வெட்டி சாய்த்த சொமேட்டோ ஊழியர்..? சிசிடிவியில் சிக்கிய காட்சி..!!

Tue Jan 10 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாபு (57). இவர் நிலத்தரகராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நாகர்கோவிலில் அமைந்துள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் சேவியர் பாபு தனது நண்பர் மோகன் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, சொமேட்டோ நிறுவன உடை அணிந்து வந்த நபர் ஒருவருக்கும் இவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வரும்போது இருசக்கர வாகனங்களை […]
நிலத்தரகரை ஓட ஓட வெட்டி சாய்த்த சொமேட்டோ ஊழியர்..? சிசிடிவியில் சிக்கிய காட்சி..!!

You May Like