fbpx

சூப்பர் போஸ்ட் ஆஃபீஸ் திட்டம்..!! வெறும் ரூ.799 செலுத்தினால் ரூ.15 லட்சம் கிடைக்கும்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

எதிர்பாராத சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்பீடை சீர் செய்வதற்காக போஸ்ட் ஆஃபீஸில் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டம் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸுடன் இணைந்து வழங்கப்படுகிறது. குறைந்த அளவிலான பிரீமியமில் அதிக லாபம் பெறக்கூடிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற போஸ்ட் ஆஃபீஸில் சேமிப்பு கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தை தொடங்க முடியும். இந்த காப்பீடு எடுத்துக் கொண்டவர்கள் விபத்தில் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.

மேலும், விபத்தில் 2 கைகள் மற்றும் கால்களையும் இழந்து விட்டாலும், காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதேபோல், ஒரு கை மற்றும் காலை இழந்தவர்களுக்கும் ரூ.15 லட்சம் காப்பீட்டு வழங்கப்படும். விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.11,000, ஒரு உறவினரின் பயண செலவாக ரூ.11,000, வாகன கட்டணமாக ரூ.11,000, ரத்தம் வழங்க ரூ.11,000, இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு ரூ.14,000, விபத்தில் இறந்துவிட்டால் இறுதிச் சடங்கிற்கு ரூ.14,000 உள்ளிட்டவை இந்த காப்பீட்டு திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்தை தொடங்கிய பின்னர், ஆண்டுதோறும் ரூ.799 செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.

Read More : மாதம் ரூ.1,34,907 சம்பளம்..!! காலிப்பணியிடங்கள் இருக்கு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

English Summary

An insurance scheme has been introduced at the Post Office to cover compensation for unexpected road accidents.

Chella

Next Post

தினமும் இத்தனை நிமிடங்கள் வாக்கிங் போனால்... ஆபத்தான நோய்களை கூட தடுக்கலாம்...

Tue Dec 24 , 2024
In this post, we will see what benefits you can get from walking for 45 minutes.

You May Like