fbpx

பெண்களுக்கான சூப்பர் திட்டம்..!! 7.5 சதவீதம் வட்டி..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு பிரத்யேகமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் எனும் புதிய சேமிப்பு திட்டமும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் என்னும் திட்டத்தின் கீழ் சிறுமிகள் அல்லது பெண்கள் என அனைத்து வயதிற்குட்பட்டவர்களும் சேமித்துக் கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி கிடைக்கிறது.

அதேபோல், இத்திட்டத்தின் கீழ் வரி விலக்கு சலுகை கிடைப்பது மட்டுமல்லாமல் நீங்கள் முதலீடு செய்த பணத்தில் இருந்து பகுதி அளவு பணத்தை எடுத்துக் கொள்வதற்கான வசதியும் இருக்கிறது. இதில், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 வருட முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.31,125 வட்டி தொகை வரை கிடைக்கிறது. வருகிற 2025 மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சிறுவனின் உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலாய் லாமா..!! குவியும் கண்டனங்கள்..!!

Mon Apr 10 , 2023
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, சிறுவனின் உதட்டில் முத்தமிடுவதும் தனது நாக்கை நீட்டி அதில் முத்தமிடச் சொல்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனது காலில் விழுந்த சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் தலாய்லாமா, பின் தனது நாக்கை நீட்டி சிறுவனது நாக்கை அதில் படுமாறு வைக்கச் சொல்கிறார். ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவின் இந்த செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். […]
சிறுவனின் உதட்டில் முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலாய் லாமா..!! குவியும் கண்டனங்கள்..!!

You May Like