நல்ல வருமானம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வழங்கும் புதுமையான திட்டங்களுக்காக எல்ஐசி நிறுவனம் அறியப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு இது வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வகையில், எல்.ஐ.சி. ஜீவன் ஆனந்த் பாலிசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஜீவன் ஆனந்த் எல்ஐசியின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இந்தப் பாலிசியில் குறைந்த முதலீடு செய்து நல்ல லாபம் பெறலாம். பாலிசி காலம் நிறைவுற்ற பின்னர், எந்தப் பிரீமியமும் செலுத்த வேண்டியது இல்லை.
அந்த வகையில், உங்களுக்கு 35 வயதாகி விட்டது என்றால், நீங்கள், 20 வருட பாலிசி எடுத்தால் வருடத்திற்கு ரூ.30,000 செலுத்த வேண்டும். இது மாதத்திற்கு ரூ.2500 அல்லது ஒரு நாளைக்கு ரூ.83 ஆகும். இதன்மூலம் 20 ஆண்டுகளில் நீங்கள் ரூ.6 லட்சம் வரை செலுத்தியிருப்பீர்கள். உங்களுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் ரிட்டன் கிடைக்கும். இது தவிர, துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், அந்த நபரின் குடும்பம் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.
இது அடிப்படைத் தொகையின் 125 சதவீதம் அல்லது வருடாந்திர பிரீமியத்தின் 7 மடங்குக்கு சமமாக இருக்கும். இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச Sum Assured ரூ.1 லட்சம் ஆகும். கடன் வசதியும் வழங்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த நபர்களும் 50 வயதுக்கு உட்பட்ட நபர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.