இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசால் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், திருமணமான தம்பதிகளுக்கு முழு தொகையாக ரூ.51,000 வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது. பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும்.
இதன் கீழ் விண்ணப்பதாரருக்கு ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி-யால் நிர்வகிக்கப்படும் திட்டத்தின் கீழ் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கிறது.