fbpx

பெண்களுக்கான சூப்பர் சேமிப்புத் திட்டம்..!! 7.5% வட்டி..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

நடப்பு நிதியாண்டுக்கான அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்கள் இம்மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பிரத்யேகமாக மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் எனும் புதிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். அந்த வகையில், இன்று முதல் நீங்கள் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் சேமிக்க தொடங்கிக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் உங்களுக்கு 7.5% வட்டி விகிதம் கிடைக்கும். மேலும், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இப்படி நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு கால முடிவில் ரூ.31 ஆயிரத்து 125 வட்டி தொகை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கும் தொகையை முதிர்வு காலம் முடிவதற்குள் பாதியில் எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அனைத்து வயது பெண்களும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது ’பத்து தல’யா..? ’விடுதலை’யா..? வெளியானது ரிப்போர்ட்..!!

Mon Apr 3 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்படத்துக்கு போட்டியாக ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல படமும் ரிலீஸ் ஆனதால் இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி […]

You May Like