fbpx

சூப்பரோ சூப்பர்..!! பட்ஜெட்டில் இந்த முக்கிய அறிவிப்புகளும் இருக்கா..? மத்திய அரசு அதிரடி

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தற்போதைய பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள், தொழில்துறையினர், ஊதியம் பெறுவோர் என பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்…

* நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்க உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியமான தொழில்களில் வேலைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வேளாண் உற்பத்தியை அதிகரித்து, அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில், சிறப்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* சிறு குறு மற்றும் சுயதொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் எளிதாக கடன் உதவி கிடைக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80சி விலக்குகளில் இருந்து ஒரு தனி விதிக்கு மாற்ற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

* டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இ-காமர்ஸ் தொடர்பான வழிமுறைகளை எளிதாக்க, வரிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வருமானவரிச் சட்டத்தின்கீழ் அடிப்படை விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது, வருமானவரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சமாக உள்ளது.

* வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி செலுத்துவதற்கான வரி விலக்குகளிலும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.

Chella

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! அமமுக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்..!!

Fri Jan 27 , 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! அமமுக வேட்பாளரை அறிவித்தார் டிடிவி தினகரன்..!!

You May Like